Thirukkural

Chapter 61 of 133: மடி இன்மை (Matiyinmai) · Wealth (Porul)

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.

Kutimatindhu Kutram Perukum Matimatindhu Maanta Ugnatri Lavarkku

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

விளக்கம்: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

His family decays, and faults unheeded thrive,Who, sunk in sloth, for noble objects doth not strive